Thursday, April 7, 2016

இயற்கை பூச்சி விரட்டி

விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று விவசாயிகளுக்கு மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.
மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் தீபிகா, கவிப்பிரியா, மகுடீஸ்வரி, ரம்யா, சாருமதி, கவிதா ஆகியோர் கம்பத்தில் விவசாயிகளுக்கு மூலிகை பூச்சி விரட்டி எப்படி தயாரிப்பது என்று செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், பீநாரி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்கு பிறகு நன்று கலக்கி வடிகட்ட வேண்டும்.இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை.மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இதன்மூலம் இயற்கையாக பூச்சிகளை விரட்டலாம், என கூறினர்.
இயற்கை விவசாயம் பற்றி அறிய

No comments:

Post a Comment