Wednesday, April 6, 2016

சண்டைக்கோழி வளர்ப்பு

சண்டைக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரும் சுய தொழில் ஆகும். அது போலவே சண்டைக்கோழி வளர்ப்பு மிகவும் லாபகரமானது கட்டுசேவல் எனப்படும் இக்கோழிகள் அதன் இனம் மற்றும் தரத்தை பொறுத்து ரூ.3000 முதல் 50000 வரை விற்க்கப்படுகிறது.அசில் எனப்படும் ஜாதி சேவல் இயல்பாகவே மிகுந்த போர்குணம் கொண்டவை. இக்கோழிகளை வளர்க்க அதன் தாய் கோழிகளை கவனமுடன் பராமரிக்க வேண்டும்.பெட்டை கோழிகளை மற்ற இண சேவல்கள் அடையாவண்னம் பார்த்துக்கொள்ள வேண்டும்.இதனால் இண கலப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.இவ்வாறு பெறப்பட்ட குஞ்சுகளில் மூன்று மாத வயதில் சேவல்களை மட்டும் தனியாக பிரித்து 3 அடி உயரம் உள்ள மூங்கில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க வேண்டும்.சுமார் எட்டு மாத வயதில் நண்றாக வளர்ந்துவிடும்.பிறகு நீச்சல் பயிற்ச்சி அளிக்கவேண்டும் இரண்டு கோழிகளை சண்டையிட்டு பழக்கவேண்டும்.நீச்சல் பயிற்ச்சி அளிப்பதால் கோழிகளில் தேவையற்ற சதைகள் நீங்கி ரானுவ வீரன் போல் உறுதியுடன் இருக்கும்.
நோய் தடுப்பு
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோடைகால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும்.இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்புமண்டலமும் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது.தண்ணீர் குடிக்காது.வெள்ளையாக கழியும். எச்சமிடும்போது ஒரு காலை தூக்கிகொள்ளும்.ஒரு இறக்கை மட்டும் செயலிழந்து தொங்கும்.
வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க குஞ்சு பொரித்த 7 நாட்களில் RDVF அல்லது Lasota என்ற் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கண்ணில் விடவேண்டும்.இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். 2 மாத வயதிற்க்கு பிற்கு RDVK என்ற் தடுப்பூசியை 8 சொட்டுகளை இறக்கையின் தோலுக்கடியில் போட வேண்டும். இந்த தடுப்பு மருந்து ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.பிறகு ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடவேண்டும்.
கால்நடை மருந்தகங்களில் RDVK மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
தீவனம்
கோழிகளுக்கு கம்பு மற்றும் கோதுமை தீவனமாக வழங்க வேண்டும்.கீரைகளை சிறு துண்டுகளாக்கி போடவேண்டும் மேலும் வாரம் ஒரு முறை வெள்ளை பூண்டு வழங்கவேண்டும்.இது சேவலின் வீரியத்தை அதிகபடுத்தும்.

இயற்கை விவசாயம் பற்றி அறிய
http://iyarkaivivasayamtn.blogspot.in/

No comments:

Post a Comment