Monday, April 18, 2016

வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு

பயிர் களை நோய்த் தாக்குதலில் இருந்து காத்திடவும், சுற்றுப்புறச் சூழலை மாசில் இருந்து பாதுகாத்திடவும் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்த வேண்டும் என்று புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் ஷாஜ ஹான், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் சாந்தி, வேளாண் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:

  • வேம்பின் அனைத்து பாகங்களும் பலன் தரும்.
  • வேப்பந்தழையை உரமாகவும், பூச்சி மருந்தாகவும், வேப்பவித்துக் கரைசலை பூச்சிக்கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும், யூரியா போன்ற ரசாயன உரத்துடன் கலந்து இட வேண்டும். இதனால் யூரியாவின் பயன் அதிகரிக்கும்.
  • வேப்ப எண்ணெயை தனியாகவும், இதர பூச்சி மருந்துகளுடன் கலந்தும் பூச்சி நாசினியாக பயன்படுத்தலாம்.
  • வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0%  அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம்.
  • வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்துவிடும்.
  • உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
  • 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான், இலைச்சுருட்டுப் புழு, ஆணைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படும்.
  • 3 லிட்டர் வேப்பெண்ணெய் உடன் 200 மில்லி ஒட்டும் திரவம் அல்லது காதி துணி சோப் நன்றாகக் கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
  • வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச்சத்து 1.1% , சாம்பல் சத்து 1.5%  உள்ளன. வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1 : 5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு, 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவும். தழைச்சத்து வீணாவதும் குறையும்.
  • நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேப்பந்தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்த பின்னர் வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் அளவில் தெளித்து நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப் புழு, மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். நொச்சி மற்றும் வேப்பந்தழையினை அரைக்க வசதியுள்ள இடங்களில் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
  • வேம்பில் அசாடிரக்டின், நிம்பிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி  நோய் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றனர்.

Monday, April 11, 2016

ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை வேளாண்மை!

வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரசாயன உரங்கள், வீரிய ஒட்டு ரக விதைகள் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் மண் வளம், இயற்கை வளம் பாதிப்புக்கு உள்ளானது.
இயற்கை வேளாண்மை: மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 
இயற்கை வளங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு, உரிமை உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைந்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தலாம். 

இயற்கை வேளாண் உற்பத்தியில் தரமான விதை, ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையைக் கடைப்பிடிப்பதால் போதுமான உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
இயற்கை உரங்களான மண்புழு உரம், கால்நடை எருக்கள், பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைகிறது. இதன் மூலம் இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாடு மிகவும் குறைவு. எனவே இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள் தரமானதாக இருக்கும்.
கால்நடை உரங்கள், மரத்தடியிலிருக்கும் உதிர்ந்த இலைகள், மக்கிய குப்பை ஆகியவற்றை சேகரித்து, சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான இயற்கை உரங்கள் வழங்க முடியும்.
பொருத்தமான பயிர்கள்: நெல், கோதுமை, மக்காச்சோளம், பருப்பு வகைகள், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்கள் இயற்கை வேளாண்மைக்கு மிகவும் பொருத்தமானவை.
இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் அதிக சத்துள்ளதாகவும், தரமுள்ளதாகவும் இருக்கின்றன. இவ்விளைப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் பொருட்டும், அதன் தரத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் இவ்விளைபொருள்கள் பசுமை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.
பசுமை அங்காடிகள்: மக்களிடம் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ரசாயன உரங்களின் பயன்பாடு பற்றிய எண்ணங்களை மாற்றுவது, நகரங்களில் வசிப்போருக்கு இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் பொருள்கள் கிடைக்கச் செய்வதே பசுமை அங்காடிகளின் முக்கிய நோக்கம்.
பசுமை அங்காடிகள் தமிழகம், கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சிறப்பாக செயலாற்றி, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
அங்காடியின் நன்மைகள்: பசுமை அங்காடியில் விவசாயிகள் நேரடியாக தங்களது இயற்கை வேளாண் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யலாம். இங்கு இடைத்தரகர்கள் இல்லாததால் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. நகரங்களில் வசிப்போர், நுகர்வோர் பலர் தங்களது தேவைகளை நேரடியாக விவசாயிகளிடம் கூறுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.
ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதால் மண் வளம் கெடுவதோடு, மக்களின் ஆரோக்கிய வாழ்வும் சீர்குலைகிறது. 
எனவே, இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இயற்கை வளம், மக்கள் நலனைப் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

இயற்கை விவசாயம் பற்றி அறிய 

மூலிகைப் பூச்சி விரட்டி!

மூலிகைப் பூச்சி விரட்டி!
பூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் சேர்த்து தான்). அவற்றை நிறுத்தி மூலிகைப்பூச்சி விரட்டிபயன்படும். இதற்கு பூச்சிகளை சாகடிக்க வேண்டாம். இனப்பெருக்கம் செய்ய விடவும் வேண்டாம். விரட்டினாலே போதும். அவை தானாக குறைந்து பொருளாதார சேத நிலைக்குள் கட்டுப்பட்டு வாழ்வதற்கும் நமது சுற்றுச்சூழல் மாசுபடாமல் நலமான வாழ்வை நாம் வாழவும் வழி பிறக்கும்.
விவசாயிகள் தோட்டத்தில் சுற்றிப் பார்த்து கிடைக்கும் பல மூலிகைகளில் குறிப்பாக கால்நடைகள் உண்ணாதவை, கசப்பான சுவை கொண்டது. துர்நாற்றம் வீசுபவை மற்றும் பசையும் விஷத்தன்மையும் கொண்டதாக இருப்பது எது என சேகரித்து மண்புழுக்களை பாதிக்காதவைகள் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
குறிப்பாக எல்லாப்பகுதிகளில் வேலியிலும் பிற பகுதியிலும் வளர்ந்துள்ள மூலிகைகளில்நொச்சி இலை, சங்குப்பூ இலை, எருக்கம்பூ இலை, சோற்றுக் கற்றாழை இலை, வேப்பம் இலை, ஆடாதோடா இலை, கருவேலம் இலை, புங்கமர இலை மற்றும் விதைகள் அரளிப்பூ இலைகள் மற்றும் விதைகள், காட்டாமணக்கு இலைகள், ஊமத்தையின் இலைகள் மற்றும் காய்கள், சீதாப்பழ இலைகள் மற்றும் காய்கள், பப்பாளி இலைகள் புகையிலையின் உவர்தூள், உண்ணிச்செடி இலைகள், விளாம்பழ இலைகள், பிரண்டையில் அனைத்து பாகங்களும், மஞ்சத் தூள், தும்பைச்செடி, காக்காச் செடி, காட்டுப்புகையிலை மற்றும் ஆர்டீமிங்சியா இலைகள் இவற்றுள் குறைந்த பட்சம் 10 தாவரப் பொருட்களில் இருந்து தலா 0.500 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு 20 லிட்டர் பசுங்கோமியம் மற்றும் 2 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைக் கலந்து பிளாஸ்டிக் கொள் கலனில் அடைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை கலக்க வேண்டும்.
இவை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும் இவற்றை வடிகட்டி தெளிவான கரைசலைக் கொண்டு தயாரிக்கலாம்.இலை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும்.
மற்றொரு முறையில் குறைந்தது 10 தாவரங்களின் பொருட்களை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்பானையில் 3 மணி நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை குளிர்ச்சி அடைந்ததும் 2 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் வைக்க வேண்டும்.
இதன் பிறகு வடிகட்டி இலைவழித் தெளிப்பு செய்தால் அதாவது இதில் 5 லிட்டர் எடுத்து 100 லிட்டர் நீரில் கரைத்து தெளித்தால் போதும்.
பூரண பயிர்பாதுகாப்பு அனைத்து வித பூச்சிகள் தாக்குதலின்றி கிடைக்கும். இவை பயிர் ஊக்கியாகவும் செயல்படுவது இன்னொரு சிறப்பு.
– டாக்டர் பா.இளங்கோவன்,
உடுமலை.
இயற்கை விவசாயம் பற்றி அறிய
iyarkaivivasayamtn.blogspot.com

Friday, April 8, 2016

வேப்பம் பிண்ணாக்கு:
வேப்பம் பிண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் பிண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிர்களுக்கு பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ, மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.

1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும்.

நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க வேண்டும்.

இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும்.

அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். 5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். இலைகளில் கரைசலின் நாற்றம் இருந்து கொண்டு இருக்கும். எனவே பூச்சிகள் நெருங்காது.

ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக குலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

இவ்விதம் தயார் செய்த பூச்சி விரட்டிக் கரைசலின் மூலம் பெரும்பாலான பூச்சிகளை விரட்டி விடலாம்

நன்றி: தினமலர்

Thursday, April 7, 2016

எங்கள் தோட்டத்து புதினா

எங்கள் தோட்டத்து புதினா ..
இயற்கை விவசாயம் முறையில் ..
பயிரிடபட்ட சிரிய பகுதி.. நல்ல முறையில் வளர்கிறது .


இயற்கை விவசாயம் பற்றி அறிய
http://iyarkaivivasayamtn.blogspot.in/

இயற்கை பூச்சி விரட்டி

விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று விவசாயிகளுக்கு மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.
மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் தீபிகா, கவிப்பிரியா, மகுடீஸ்வரி, ரம்யா, சாருமதி, கவிதா ஆகியோர் கம்பத்தில் விவசாயிகளுக்கு மூலிகை பூச்சி விரட்டி எப்படி தயாரிப்பது என்று செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், பீநாரி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்கு பிறகு நன்று கலக்கி வடிகட்ட வேண்டும்.இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை.மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இதன்மூலம் இயற்கையாக பூச்சிகளை விரட்டலாம், என கூறினர்.
இயற்கை விவசாயம் பற்றி அறிய

Wednesday, April 6, 2016

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகள்

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகள்
அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது.

இயற்கை விவசாயம் பற்றி அறிய
http://iyarkaivivasayamtn.blogspot.in/

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

1.குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
2. குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
3.கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
4.எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
5.வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
6.ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
7.குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
8.குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
9.ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
10.சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
11.சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
12.குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
13. ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
14.குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
15.குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
16.கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
17.மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
18.ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்

நாட்டுக் கோழிகள் தாய்மை உணர்வு

நாட்டுக் கோழிகள்
தாய்மை உணர்வு அதிகம் கொண்டவை.
எனவே தொடர்ந்து 15--20
முட்டைகளிட்டு அவற்றைஅடைகாத்து குஞ்சு பொரிக்கும்
குணம் கொண்டவை.
தாய்மார்கள்
குழந்தைகளை பராமரிப்பது போலவே நாட்டுக்கோழிகளும்
குஞ்சுகளைக் கண்ணும் கருத்துமாகப்
பாதுகாத்து வளர்க்கும். குஞ்சுகளைப்
பாதுகாப்பதற்காக பருந்து, கழுகு,
காக்கை போன்றஎதிரிகளிடமிருந்து காப்பதற்கு அவைகளைப்
பறந்து துரத்தி அடிக்கும் குணம்
கொண்டவை.
நாட்டுக்கோழி வளர்ப்பினால் கீழ்வரும்
நன்மைகள் ஏற்படுகின்றன.
1. கிராம மக்களின் நிலையான
வருமானம்
2. உறவினர்களுடன் உண்டு மகிழ
3. வேண்டுதலுக்காகப் பலியிட
4. அவசரத் தேவைக்கு செலவு செய்ய
5. விலங்கினப் புரதத்தை பூர்த்தி செய்ய
6. மிகக் குறைந்த
இடவசதி போதுமானது
7. குறைந்த முதலீடு போதுமானது.
8. எளிமையான
பராமரிப்பு சுற்றுப்புறத்தைத்
தூய்மையாக வைத்திருக்கும்
குறைந்த சுகாதாரப் பணியாளர்.
9. அதிக நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டது.
10. அக ஒட்டுண்ணிகளுக்கும் நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டது.
பெரும்பாலான கிராமங்களில்
வீட்டிற்கு குறைந்தது 10 முதல் 20
கோழிகள் வரை வளர்க்கின்றனர். பெண்கள்
அதன் மூலம் கிடைக்கும்
வருமானத்தை சிறுவாட்டுக்காசு என்றும்
சிறுசேமிப்பாகச்
சேர்த்து தேவையான
பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான
ஏழை எளிய மக்கள்
ஹைப்போ புரோட்டினிமியா என்னும்
புரதச்சத்து மிகவும் குறைந்த
உணவையே உட்கொள்கின்றனர்.
இதனால் சரியான உடல்
வளர்ச்சி இல்லாமலும்,
மூளை வளர்ச்சி இல்லாமலும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்தும்
காணப்படுகின்றனர். எனவே கிராம
மக்களுக்கு நாட்டுக் கோழிகள் மூலம்
ஓரளவு புரதச்
சத்து கிடைத்து விடுகிறது.
இது நாட்டுக் கோழியின்
சிறப்பு அம்சமாகும்.
1947ம் ஆண்டு சுதந்திரம்
பெற்றபோது நாம் உட்கொண்ட
முட்டையின் அளவு 7முதல்
10முட்டைதான் இந்தியாவில்
இன்று ஒரு நாளைக்கு 15
கோடி முட்டைகள்
உற்பத்தி செய்து முட்டை உற்பத்தியில்
இரண்டாவது இடத்தைப்
பிடித்து விட்டோம் அப்படி இருந்தும்
நாம் உட்கொள்ளும் முட்டையின்
எண்ணிக்கை 35-40 ஆக
மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் நாம்
உட்கொள்ள வேண்டிய
முட்டை ஒரு நாளைக்கு அரை முட்டை வீதம்
வருடத்திற்கு 180 முட்டைகள் சாப்பிட
வேண்டும்.
தற்போது உற்பத்தி செய்யப்படும்
முட்டைகளில் 35-40 சதவீதம்
நாட்டுக்கோழிகளில் இருந்து தான்
கிடைக்கிறது என்பதே உண்மையாகும்.
நாட்டுக் கோழிகளை வளர்பதற்கு மிகக்
குறைந்த
இடவசதியே போதுமானது முட்டைக்கோழிகளை வளர்ப்பதைப்போல்
அதிக செலவு செய்து கொட்டகைகள்
அமைக்க வேண்டிய அவசியமில்லை.
பண்ணைகளில் வளர்க்கப்படும்
வீரியக்கோழிகளுக்கு லட்சக் கணக்கில்
முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
ஆனால் ஐந்து நாட்டுக்கோழிகள்
வாங்கி அதிலிருந்தே இனப்பெருக்கம்
செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்
ஒரு கோழியிலிருந்து வருடத்திற்கு ரூ5000
வருமானம் கிடைக்கும். 10
கோழிகளை வளர்த்தாலே வருடத்திற்கு 50,000ரூபாய்
வருமானம் கிடைக்கும். கோழிப்
பண்ணைகளில் உள்ள வீரிய
இனக்கோழிகளைப் பராமரிக்க
வேலை ஆட்களை அமர்த்த
வேண்டியது அவசியம் நாட்டுக்
கோழிகளை வளர்க்க வேலை ஆட்கள்
தேவையில்லை.
வீட்டில் உள்ள பெண்களும்,
குழந்தைகளுமே போதுமானது எனவே செலவும்
குறைவாகிறது. நாட்டுக் கோழிகள்
வீட்டிற்கு வெளியில் உள்ள புழு,
பூச்சிகளைக் சாப்பிடுவதாலும், புல்
பூண்டுகளை உண்பதாலும்
சுற்றுபுறம் தூய்மையாக
இருப்பதுடன் சுகாதாரமாகவும்
இருக்கிறது. இதனால்
நாட்டுக்கோழிகள் தனக்குத்
தேவையான புரதச் சத்தையும்
நார்ச்சத்தையும்
தானே தேடிக்கொண்டு உண்பதால்
நமக்கு தீவனச் செலவு குறைவதுடன்
நாட்டுக்கோழி இறைச்சி மிருதுவாகவும்
ருசியாகவும் உள்ளது. வீரிய இனக்
கோழியின் இறைச்சி அவ்வளவாக
ருசியாக இருக்காது.
வீரிய இனக் கோழிகளுக்கு 64 நோய்கள்
தாக்குகின்றன. ஆனால் நாட்டுக்
கோழிகளுக்கு 4--5
நோய்களே ஏற்படுகின்றன. முட்டைக்
கோழிகளுக்கு 13 தடுப்பூசிகளும்,
இறைச்சிக் கோழிகளுக்கு 5
தடுப்பூசிகளும் அவசியம் போட
வேண்டும் ஆனால் நாட்டுகோழிகள்
நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டவை.எனவே 10-20
கோழிகள் வளர்ப்பவர்கள்
வெள்ளைக்கழிச்சல் நோய் என்னும்
இரானிக்கெட் நோய்க்கு மட்டும்
தடுப்பூசி போட்டால் போதுமானது.
அதிக அளவில்
நாட்டுக்கோழிகளை வளர்க்கும்
போது 4-5 தடுப்பூசிகள் கட்டாயம்
போட வேண்டியது அவசியம். ஒரு சில
சமயங்களில் மட்டுமே காக்சீடியோசிஸ்
என்னும் இரத்தக்கழிச்சல் நோயால்
நாட்டுக் கோழிகள்
பாதிக்கப்படுகின்றன. ஆனால் வீரிய
இனக்கோழிகள்
தொட்டாச்சிணுங்கியைப் போல் அதன்
பராமரிப்பில் சிறு தவறு நேர்ந்தாலும்
இரத்தக் கழிச்சல் நோயால்
பாதிக்கப்பட்டுவிடும்.
நாட்டுகோழிகளுக்கு மேரக்ஸ்
வியாதியும் கம்போரா வியாதியும்,
கொரைசா என்னும்
சிறுமூச்சுக்குழல் வியாதியும்
ஏற்படுவதில்லை. ஆனால் வீரிய
இனக்கோழிகள் இவைகளால்
பாதிக்கப்பட்டு முட்டை உற்பத்தி குறைவதுடன்
உயிரிழப்பு ஏற்படும். வீரிய
இனக்கோழிகள் கோடை காலத்தில்
வெப்பத்தைத் தாங்காமல் ஹீட் ஸ்டிரோக்
என்னும் நோயால் பாதிக்கப்பட்டு அதிக
கோழிகள் இறந்துவிடும். ஆனால்
நாட்டுகோழிகளுக்கு குறைந்த
அளவு இறகுகளும் மெல்லிய
கொழுபற்ற தோலும் உள்ளதால்
வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறது.
நாட்டுக் கோழிகள் நெரிசலைத்
தாங்கும் குணம் கொண்டவை. ஆனால்
உயிரினக் கோழிகள் நெரிசலைத்
தாங்காது இறந்துவிடும். உயிரினக்
கோழிகள் பண்ணைகளில்
ஒரே கூட்டமாக ஒரு மூலைக்குச்
சென்றால் அதில் பெரும்பாலான
கோழிகள் இறந்துவிடும். நாட்டுக்
கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்பும்
போது ஒரே கோணிப்பையில் 80-100
கோழிகளைப்
போட்டு அனுப்பினாலும் இறக்காது.
ஆனால் உயிரினக்கோழிகள் அதிகம்
இறந்து விடும். நாட்டுக்
கோழி முட்டையின் மஞ்சள் கரு நல்ல
அடர்ந்த மஞ்சள் நிறத்துடன் கெட்டியாக
இருக்கும்.
கோழிகள் புல் பூண்டுகள்
சாப்பிட்டு வைட்டமீன் எ சத்து அதிகம்
உள்ளதால் மஞ்சள் கரு அடர்த்தியாக
உள்ளது. ஆனால் உயிரினக்
கோழி முட்டையில் மஞ்சள் கரு வெளிர்
மஞ்சள் நிறமாக இருப்பதோடு, நாட்டுக்
கோழி கருவைப் போல கெட்டியாக
இல்லாமல் நீர்த்தும் இருக்கும். நாட்டுக்
கோழிகள் 15-20 முட்டைகள் இட்டவுடன்
அடைக்கு உட்கார்ந்து விடும் ஆனால்
உயிரினக்
கோழிகளுக்கு அடைகாக்கும் குணம்
கிடையாது. நாட்டுக்கோழிகள்
வெளியில் மேய்ச்சலுக்குச்
சென்று தீவனத்தை உண்ணும் குணம்
கொண்டது. ஆனால் உயிரினக் கோழிகள்
வெளியில் சென்று மேயாது.
நாட்டுக்கோழிகளை உயிரினக்
கோழிகள்
வளர்ப்பது போன்று கலப்புத்தீவனம்
கொடுத்து வளர்த்தால் அவை சரியாக
வளர்வதில்லை.
நாட்டுக் கோழி இறைச்சியின்
மருத்துவ குணங்கள் :
கடக்நாத் என்னும் கருங்கோழிகள்
மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக்
கொண்டது. இக்கோழியின்
இறைச்சி கருப்பாக இருப்பதால்
இதற்கு பிளாக் மீட் சிக்கன்
அல்லது காலாமாசி என்று அழைக்கின்றனர்.
இதன் இறைச்சி ருசியாகவும்,
மணமாகவும் இருப்பதுடன் மருத்துவ
குணமும் கொண்டது.
இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட
நோய்களுக்கு மருந்தாகப்
பயன்படுத்துகின்றனர். ஆண்மை குணம்
குறைந்த ஆண்கள் கடக்நாத்
இறைச்சியை சாப்பிட்டால்
வயாக்ரா மருந்தைப் போல
ஆண்மையை அடைவார்கள்.
ஹோமியோபதி மருத்துவத்தில்
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு கடக்நாத்
கோழி இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.
கடக்நாத் கோழி இறைச்சியில்
கொலஸ்டரால் சத்து மிகவும்
குறைவு என்பதால் இருதய நோய்
உள்ளவர்களுக்கும்
இரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் ஏற்ற
இறைச்சியாகும். மேலும் அதிகமான
அமினோ அமிலங்களும்
மனிதர்களுக்குத் தேவையான
ஹார்மோன் சத்துக்களும் அதிகம்
உள்ளது.
“நாட்டுக் கோழி வளர்ப்போம்
வீட்டு வருமானம் பெருக்குவோம்”

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்
நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின்அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டுமேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காகமட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.
Naatu Koli Enangal நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
கொண்டைக்கோழி,
குட்டைக்கால் கோழி.
உயர்ரக நாட்டுக்கோழி இனம்
நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.
Nattu Koli Thearvu கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம்பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும். சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. தீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்
Nattu Koli Valarpu Muraigal நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.
Meichala Valarndhaa Dhaan Athu Nattu Koli "மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
"பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும்.
Naatu Kolil Paramarippu நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒருஅடைகாப்பானில் அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட்என்றளவில் வெப்பம், பிறகு ஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும்.குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். நியோ மைசின், டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்ககொடுக்கப்பட வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு.
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து
கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
Muttaiyidum Naatu Koli Paramarippu முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.
கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில்கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது.பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும்உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல்சூட்டினை தணித்துக் கொள்ள முடியும்
.
குளிர்கால பராமரிப்பு
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது, எண்ணிக்கை,எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகிவிடும்.மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவைஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

நாட்டுகோழிகளின் நல மேலாண்மை

 நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசிஅவசியம் போட வேண்டும்

கோழிகளில் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்

கோழிகளில் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்
ஆயிரக்கணக்கில் கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை இன்றியமையாததாகிறது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன.
■ஒரு புதிய கோழிகளை கொட்டகையினுள் விடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே கொட்டகையை சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
■பழைய கோழியின் எச்சங்களை கூடிய சீக்கிரம் அகற்றிவிடவேண்டும். சுவர், மேல்கூரை போன்றவைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவேண்டும்.
■ஒரு நல்லக் கிருமி நாசினிக் கொண்டு இவையனைத்தையும் சுத்தம் செய்தல் வேண்டும்.
■பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்து உலர வைத்த பின்பே உபயோகிக்கவேண்டும்.
■ஒளி எதிரொளிப்பான் மற்றும் வளி உமிழும் விளக்குகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டும். பயனற்ற விளக்குகளை அகற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
■எலி, நாய், பூனை போன்ற விலங்குகளை பண்ணைக்கருகே அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
■பார்வையாளர்களை அதிகம் உள்ளே வராமல் தடுப்பது நன்று.
■இறந்து போன கோழிகளை உடனே தொலைவில் கொண்டு சென்று புதைத்து விடுதல் வேண்டும்ட.
■1 சதவிகிதம் அம்மோனியாக் கரைசல் கொண்டு நீர் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
■உள்ளே செல்லும் பாதை அமைப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
■பண்ணையைச் சுற்றிலும் நல்ல சுகாதாரமான முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
■ஈரமானக் கூளங்களை உடனே நீக்கி புதிய கூளங்களை மாற்றவேண்டும்.
■ஒவ்வொரு நாளும் கோழிகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, இல்லை சோர்ந்து ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவனமிடும்போதும் மற்றும் உள்ளே சென்று வரும் போதும் கவனிக்கவேண்டும்.
■நல்ல உற்பத்தி நேரத்திலும் மற்றும் இதர அட்டவணை நேரப்படியும் குடற்புழுநீக்க மருந்து அளிக்கவேண்டும்.
■ஏதேனும் நோய்பரவல் அல்லது தாக்கம் தெரிந்தால் உடனே தேவையான நடவடிக்கைகளை உடனே

சண்டைக்கோழி வளர்ப்பு

சண்டைக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரும் சுய தொழில் ஆகும். அது போலவே சண்டைக்கோழி வளர்ப்பு மிகவும் லாபகரமானது கட்டுசேவல் எனப்படும் இக்கோழிகள் அதன் இனம் மற்றும் தரத்தை பொறுத்து ரூ.3000 முதல் 50000 வரை விற்க்கப்படுகிறது.அசில் எனப்படும் ஜாதி சேவல் இயல்பாகவே மிகுந்த போர்குணம் கொண்டவை. இக்கோழிகளை வளர்க்க அதன் தாய் கோழிகளை கவனமுடன் பராமரிக்க வேண்டும்.பெட்டை கோழிகளை மற்ற இண சேவல்கள் அடையாவண்னம் பார்த்துக்கொள்ள வேண்டும்.இதனால் இண கலப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.இவ்வாறு பெறப்பட்ட குஞ்சுகளில் மூன்று மாத வயதில் சேவல்களை மட்டும் தனியாக பிரித்து 3 அடி உயரம் உள்ள மூங்கில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க வேண்டும்.சுமார் எட்டு மாத வயதில் நண்றாக வளர்ந்துவிடும்.பிறகு நீச்சல் பயிற்ச்சி அளிக்கவேண்டும் இரண்டு கோழிகளை சண்டையிட்டு பழக்கவேண்டும்.நீச்சல் பயிற்ச்சி அளிப்பதால் கோழிகளில் தேவையற்ற சதைகள் நீங்கி ரானுவ வீரன் போல் உறுதியுடன் இருக்கும்.
நோய் தடுப்பு
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோடைகால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும்.இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்புமண்டலமும் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது.தண்ணீர் குடிக்காது.வெள்ளையாக கழியும். எச்சமிடும்போது ஒரு காலை தூக்கிகொள்ளும்.ஒரு இறக்கை மட்டும் செயலிழந்து தொங்கும்.
வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க குஞ்சு பொரித்த 7 நாட்களில் RDVF அல்லது Lasota என்ற் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கண்ணில் விடவேண்டும்.இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். 2 மாத வயதிற்க்கு பிற்கு RDVK என்ற் தடுப்பூசியை 8 சொட்டுகளை இறக்கையின் தோலுக்கடியில் போட வேண்டும். இந்த தடுப்பு மருந்து ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.பிறகு ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடவேண்டும்.
கால்நடை மருந்தகங்களில் RDVK மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
தீவனம்
கோழிகளுக்கு கம்பு மற்றும் கோதுமை தீவனமாக வழங்க வேண்டும்.கீரைகளை சிறு துண்டுகளாக்கி போடவேண்டும் மேலும் வாரம் ஒரு முறை வெள்ளை பூண்டு வழங்கவேண்டும்.இது சேவலின் வீரியத்தை அதிகபடுத்தும்.

இயற்கை விவசாயம் பற்றி அறிய
http://iyarkaivivasayamtn.blogspot.in/